உருகி.உருகி..போனதடி என் உள்ளம்.. ரசிகர்களை ஈர்க்கும் ‘ஜோ’ பட புகழ் மாளவிகா மனோஜ் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்..

By Mahalakshmi on ஜனவரி 27, 2024

Spread the love

இயக்குனர் ஹரிஹரன் ராம் எஸ் இயக்கத்தில் ரியோராஜ்  நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜோ”.  இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மனோஜ் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது மாளவிகா மனோஜின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

   

நடிகர் ரியோராஜ் அங்கராக சினிஉலகில் அறிமுகமானார். அதன்பின்னர், படிப்படியாக சின்னத்திரையில் சீரியலில் நடித்து வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் நெருங்கிய நண்பரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட “ஜோ” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

   

 

இதில், கடந்த 2022 ஆம் ஆண்டு முழுவதும் 37 நாட்கள் மட்டுமே இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சென்னை, கோவை, பொள்ளாச்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் ஒரு காதல் நாடக திரைப்படம் ஆகும்; இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதனால், படக்குழு எதிர்பார்த்த வெற்றியை இப்படம் நிறைவேற்றவில்லை. தற்போது இந்த படத்தில் நடித்துள்ள மாளவிகா மனோஜின்  லேட்டஸ்டான  க்யூட் போட்டோஸ்  இணையத்தில் வெளியாகி ரசிகர்களை  கிறங்க செய்துள்ளது.

author avatar
Mahalakshmi