துணை நடிகையான மாலதி கன்னட திரை உலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் மாலதி அளித்த பேட்டியில் கூறியதாவது, பெரும்பாலும் அம்மா கேரக்டர் தான் எனக்கு கிடைக்கிறது. அம்மா கதாபாத்திரத்திற்கு பலர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள்.
தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என கூறி டார்ச்சர் செய்கின்றனர். இதனால் சினிமாவில் நடிக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இளம் நடிகைகளுக்கு கூட இந்த பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் என்னை போன்ற வயதான துணை நடிகைகளை டார்கெட் செய்து துரத்துகின்றனர். பணத்திற்காக எந்த ஒரு பிரச்சனையும் செய்யாமல் ஈசியாக படுக்கைக்கு வந்து விடுவார்கள் என தப்பு கணக்கு போடுகின்றனர்.
ஒருவேளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதிக்கவில்லை என்றால் கால் மீது கால் போட்டு உட்கார்ந்தால் கூட குற்றம் என கூறுவார்கள். இதுவே அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லிவிட்டால் சம்பந்தப்பட்ட துணை நடிகைகளுக்கு பிக்கப், ட்ராப், கேரவன் வசதி, எக்ஸ்ட்ரா மணி, மேடம் என ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கும். சினிமாவில் இது போன்ற அசிங்கம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதை எந்த முன்னணி நடிகர்களும் தட்டி கேட்பதோ தடுப்பதோ இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக நடிகைகள் நெருக்கமாக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நடிக்க ரெடியாக உள்ளனர். ஆனால் அதையே அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு அவர்களிடம் அத்துமீறுகின்றனர். இன்டஸ்ட்ரியல் இப்படி தொடர்ந்து அசிங்கங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது என மாலதி கூறியுள்ளார்.