இந்த பிரபல நடிகைக்கு ஸ்ரீதேவி சித்தியா?… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

By vinoth on அக்டோபர் 21, 2024

Spread the love

ஒரு சிலருக்குதான் சினிமா வாழ்க்கை எப்போதுமே மேல்நோக்கி செல்லும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஸ்ரீதேவி. 1969-ஆம் ஆண்டு ரிலீசான துணைவன் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். கடந்த 1976-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் இணைந்து ஸ்ரீதேவி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான 16 வயதினிலே, மூன்றாம் பிறை மற்றும் வாழ்வே மாயம் போன்ற எண்ணற்ற படங்கள் அவரை முன்னணிக் கதாநாயகி ஆக்கின.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து அந்த காலத்திலேயே பான் இந்தியா நடிகையாக வலம் வந்தார்

   

#image_title

   

மூன்றாம் பிறை படத்தின் இந்தி பதிப்பான சத்மா படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாக அவருக்கு அங்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவானது. அதன் பிறகு அவர் தமிழில் படங்கள் நடிக்கவிலை. அடுத்தடுத்து இந்தி படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் நடிகையானார். 80 களிலும் 90 களின் தொடக்கத்திலும் அவரின் படங்கள் இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டாகின. அந்த காலத்தில் அவர் அறிவிக்கப்படாத மிஸ் இந்தியாவாக இருந்தார். இந்திக்கு சென்ற பின்னர் அவர் பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக விஜய்யின் புலி படத்தில் நடித்தார்.

 

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் இப்போது நடிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீதேவியின் அக்கா மகளான மகேஸ்வரி பாரதிராஜாவின் கருத்தம்மா மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் அஜித்தின் உல்லாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் காணாமல் போனார். தற்போது தெலுங்கில் அவர் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்ரீதேவியின் அக்கா மகள் என்பதே பலருக்கும் தெரியாது.