‘மாற்றுத்திறனாளியை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன்’…. பகீர் பேட்டியளித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை….  உங்களுக்குள்ள இப்படி ஒரு ஆசையா?…

By Begam

Published on:

விஜய்த்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்து பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த தொடரில் தற்பொழுது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை லாவண்யா.

   

மாடலிங் துறையில் முதன் முதலில் கால் பதித்த இவர் கிடைத்த சீரியல் வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு தற்பொழுது பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். தற்பொழுது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளார் நடிகை லாவண்யா.

இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் கதாநாயகியாக களமிறங்கினார். இந்த கதையின் படி இவர் ஒரு மாற்றுத்திறனாளியைத்  தான் திருமணம் செய்து கொள்வார். பின்னர் அவரை பல போராட்டங்களுக்கு பிறகு இறுதியாக குணப்படுத்துவார். அதுபோலவே தனது நிஜ வாழ்க்கையிலும் மாற்றுத்திறனாளி தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார் நடிகை லாவண்யா.

அதற்காக இவர் தனது தந்தையிடம் தற்பொழுது சண்டையிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அவருக்கு இப்படி ஒரு ஆசை வர காரணம் சிறுவயதில் பார்த்த ஆண்கள் யாருமே சரியில்லையாம். அதனால் தனக்கு ஆண்களை கண்டால் பிடிக்காது என்றும், காலேஜில் ஒரு மாற்றுத்திறனாளி பையனை சந்தித்தேன்.

அப்போதுதான் எனக்கு அப்படி ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது என்றும் மனம் திறந்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  தற்பொழுது இவரின் பேட்டியை கண்ட ரசிகர்கள் ‘உங்களுக்குள்ள இப்படி ஒரு ஆசை இருக்கா?’ என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.