நடிகை குஷ்புவின் மகளா இவர்?… அழகுல அம்மாவையே மிஞ்சிடுவார் போலையே… வைரலாகும் அழகிய புகைப்படம் இதோ…

By Begam

Updated on:

தமிழின் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் முன்னணி ஹீரோக்களான கமல், ரஜினி போன்றோருடன்  இணைந்து நடித்து  பிரபலமடைந்தார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களையும் தன்னுடைய கொழுக் முழுக் தேகத்தால் கட்டி போட்டார். குடும்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமின்றி ,மாடர்ன்,  கிளாமர், ரொமான்டிக் கதாபாத்திரங்களிளும்  பின்னி பெடல் எடுத்தார்.

   

தற்போது சீரியல்களின் நாயகியாகவும் சினிமாவில் குணசத்திரவேடத்திலும் நடித்து வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்கள் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக ஜொலிக்கிறார்கள். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை குஷ்பூ. இவர் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.

இவர் தற்பொழுது தனது விடுமுறையை கொண்டாட தனது குடும்பத்தோடு இணைந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளா.ர் அங்கு அவர் தனது கணவர் மற்றும் மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘நடிகை குஷ்புவின் மகளா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….