நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனா இது?… புடவையில் இவ்வளவு அழகா இருக்காங்களே… லேட்டஸ்ட் புகைப்படம்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் அருண் பாண்டியன். இவர்  நடிகனாக மட்டுமின்றி இயக்குனராக, தயாரிப்பாளராக, தற்போது அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் ‘ஊமை விழிகள்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். ஆனால் இவரது முதல் திரைப்படம் ‘சிதம்பர ரகசியம்’. இவர் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை படைத்துள்ளார்.

   

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது ‘ஐயங்கரன் இண்டர்நேஷனல்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தற்பொழுது நடிப்பை விட்டு விலகி திரைப்படங்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அருண் பாண்டியனின் மகள்தான் கீர்த்தி பாண்டியன். இவர் தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் ‘அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படம் வெளிவந்தது.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கீர்த்தி பாண்டியன். இவர் தற்பொழுது நீல நிற புடவையில் தேவதை போல ஜொலிக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த நெடிசன்கள் ‘இதுதான் அழகு குடும்பப்பாங்கான அழகு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம்….