சூடான பாறையில அந்த சீன எடுத்தோம்… எங்கிட்ட இப்படிக் கேக்குறீங்களே சத்யராஜ் கிட்ட கேப்பீங்களா?- ஆபாசமாக பேசிய நபருக்கு கஸ்தூரி பதில்!

By vinoth on செப்டம்பர் 19, 2024

Spread the love

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ‘ஆத்தா உன் கோயிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  அதன் பிறகு சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, ஆகாயப் பூக்கள், கோலங்கள், இந்தியன், சுயம்வரம், தோஸ்த், வடகறி கடைசியாக தமிழரசன் என்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கஸ்தூரி வழக்கறிஞர் படிப்பில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது சினிமா அரசியல் பொது நலம் சார்ந்த பிரச்சினைகளில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார்.

   

kasturi and sathyaraj in amaidhi padai

   

அவர் தெரிவிக்கும் பல கருத்துகள் சர்ச்சைகளை உருவாக்குகின்றன. இதனால் அவருக்கு ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் உருவாகியுள்ளன. அவர் என்ன கருத்து சொன்னாலும் அது உடனே கவனிக்கப்படுகிறது. அவருன் வெறுப்பாளர்கள் அவர் பற்றி என்ன கருத்து சொன்னாலும் அதை அசராமல் சமாளிக்கக் கூடியவர் கஸ்தூரி.

 

இந்நிலையில் கஸ்தூரியைப் பற்றி இணையதளத்தில் ஒரு நபர் ‘நீ அமைதிப்படை படத்துல சத்யராஜ் கிட்ட அல்வா வாங்குனவதான? நீ ரொம்ப யோக்கியமா?’ எனக் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர் வீடியோ வெளியிட்டுள்ள கஸ்தூரி ”நான் சத்யராஜ் கிட்ட அல்வா வாங்குனன்னு சொல்றீங்களே? என்னைக்காவது சத்யராஜ் கிட்ட போய் கஸ்தூரிக்கு அல்வா கொடுத்து அவ வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்களேன்னு கேட்டு இருக்கீங்களா? இதுதான் ஒரு ஆணோட வக்கிரப் பார்வை.

amaithi padai movie

நாங்க அந்தக் காட்சிய சூடான பாறையில மேல துண்டுபோட்டு படுத்து எடுத்தோம். அதை சத்யராஜ் சாரும் நானும் ஒரு தொழில்ரீதியான நடிகர்களாகதான் எடுத்தோம். அதக் கூட புரியாம இப்படி பேசுறது எல்லாம் சுத்த நான்சென்ஸ்” என பொறிந்து தள்ளியுள்ளார்.