48 வயசுல இதெல்லாம் தேவையா?… மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை கஸ்தூரி… கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்…

 48 வயசுல இதெல்லாம் தேவையா?… மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை கஸ்தூரி… கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. இவர் 1991இல் தமிழ் சினிமாவில் ‘ஆத்தா உன் கோயிலிலிலே’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.

தற்பொழுது நடிகை கஸ்தூரி தன்னுடைய பக்கத்தில் தமிழக அரசியல் பற்றியும், இந்திய அரசியல் பற்றியும் அடிக்கடி கருத்து வெளியிட்டு வருகிறார். மேலும் சின்னத்திரை விவாதங்களில் பங்கேற்று அதிரடி கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் கஸ்தூரி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும்  பங்கேற்றார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கஸ்தூரி ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார்.

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் எப்பொழுதும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட மாடர்ன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ’48 வயசுல இதெல்லாம் தேவையா?’ என்று கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Begam