csk வின் மாஸ் வெற்றியை… துள்ளி குதித்துக் கொண்டாடிய நடிகை கஸ்தூரி… அவரே வெளியிட்ட வைரல் வீடியோ…

By Begam

Published on:

ஐபிஎல் 2023 போட்டியின் வெற்றிக் கோப்பை தற்போது சிஎஸ்கே அணி கைப்பற்றியுள்ளது. ஐந்தாவது முறையாக கோப்பையை பெற்று சாதனையும் படைத்துள்ளது சிஎஸ்கே. தற்பொழுது இந்த போட்டியை கண்டு களித்த பிரபலங்கள் ஒவ்வொருவராக வெற்றி தருணத்தை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை கஸ்தூரி csk வின் வெற்றி தருணத்தை கொண்டாடிய தருணங்களை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோயிலிலே, சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, ஆகாயப் பூக்கள், கோலங்கள், இந்தியன், சுயம்வரம், தோஸ்த், வடகறி கடைசியாக தமிழரசன் என்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

திரைப்பட நடிகையாக மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது சினிமா அரசியல் பொது நலம் சார்ந்த பிரச்சினைகளில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார். இதனால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கஸ்தூரி. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வின் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. தற்பொழுது இந்த வெற்றியை வீட்டில் இருந்தபடியே கண்டுகளித்த நடிகை கஸ்தூரி அந்த அழகிய தருணங்களை வீடியோவாக இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)