‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை கனிகாவின் கணவரை பார்த்திருக்கீங்களா?… அட இவரா?… எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே…

‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை கனிகாவின் கணவரை பார்த்திருக்கீங்களா?… அட இவரா?… எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே…

சன் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று எதிர்நீச்சல் சீரியலாகும். இதில் நடிகை கன்னிகா ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக அதிகமான ரசிகர் பட்டாளமே இவருக்கு உருவாகி உள்ளது. இவர் மதுரையைச் சார்ந்தவர். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘5 ஸ்டார்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து தமிழில் எதிரி, டான்சர் ,வரலாறு, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர்  மலையாள படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பல மொழி  திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் 2009ஆம் ஆண்டு மலையாளத்தில் சிறந்த நடிகை என்ற விருது பெற்றுள்ளார்.

அதே  ஆண்டு கேரளா திரைப்பட சங்கத்தின் சிறப்பு நடிகை விருதும் பெற்றுள்ளார்.தனது இனிய குரலாலும் தமிழில்  பின்னணி பாடகராக பாடியுள்ளார். இவர் நடிகை மட்டுமல்லாமல் பல  திரைப்பட நடிகைகளுக்கு  டப்பிங் குரல் கொடுத்துள்ளார். ‘சச்சின்’ திரைப்படத்தில் ஜெனிலியா க்கும், ‘அன்னியன்’ திரைப்படத்தில் சதாவுக்கும், ‘சிவாஜி’ திரைப்படத்தில் ஸ்ரேயாவுக்கும் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

2008 ஆம்ஆண்டு நடிகை கன்னிகாவுக்கும்,  நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஸ்யாம் ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும்  அமெரிக்கா சென்று விட்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார் .2016 ஆம் ஆண்டு தன் மகன் தமிழ் கலாச்சாரம் படி வளர வேண்டும் என்பதற்காக திரும்பி சென்னைக்கு வந்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கனிகா. இவர் தற்பொழுது தனது கணவர் ஷாமிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி தனது கணவருடன்  எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

Begam