தாவணி பாவாடையில் ‘புஷ்பா’ படத்தின் ‘சாமி’ பாடலுக்கு.. செம ஆட்டம் போட்ட ஹன்சிகா.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on ஆனி 15, 2024

Spread the love

புஷ்பா 2 திரைப்படத்தில் வெளியான சாமி பாடலுக்கு நடிகை ஹன்சிகா மோத்வானி நடனமாடி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார். மேலும் சுனில், பகத் பாசியில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

   

   

இப்படத்தில் வந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் திரைப்படம் வெளியாகி 400 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனம் பெற்றன. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகின்றது.

 

புஷ்பா 2 தி ரூல் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் டீசரும் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. புஷ்பா புஷ்பா என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில மாதங்களை இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷனக்கான வேலையில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் வெளியான சாமி பாடல் ஏற்கனவே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருந்தது. இந்த பாடலுக்கு அனைவரும் நடனமாடி மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் வரும் ஹூக் ஸ்டெப்புக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்து இருக்கின்றார். அவர் நடனமாடிய வீடியோவானது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றது.

ராஷ்மிகாவின் சாமி பட பாடலுக்கு தாவணி பாவாடை அணிந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பாக நடனமாடி இருக்கின்றார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. மேலும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் ரிலீஸ் என கூறப்பட்டு வந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியாத காரணத்தினால் ஆகஸ்ட் மாதத்தில் இந்த திரைப்படம் வெளியாகுமா? என்பது சந்தேகமாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)