கடும் குளிரில் ஹனிமூன் கொண்டாடும் நடிகை ஹன்சிகா!…. அவரே ஹாட் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!….

By Begam

Published on:

நடிகை ஹன்சிகா தனது ஹனிமூன் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் ‘சின்ன குஷ்பு’ என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட், வேலாயுதம், மாப்பிள்ளை போன்ற படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது. ஒரு கட்டத்தில் குண்டாக இருந்த இவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தற்பொழுது ஸ்லிம் லுக்கிற்கு  மாறினார்.

   

இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் மகா. திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியை தரவில்லை. நடிகை ஹன்ஷிகாவின் திருமணத்திற்க்காக ஜெய்ப்பூரில் உள்ள 480 ஆண்டு கால பழமையான அரண்மனை ஒன்று பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டு திருமணமும் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

நடிகை ஹன்சிகா சொஹைல் கத்துரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு நடிகை ஹன்சிகா இரண்டு நாட்களில் தன் ஒப்பந்தமான படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். இதை தொடர்ந்து ஹனிமூனுக்கு செல்லாமல் நடிகை ஹன்சிகா நடிக்க தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசத் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா ஆஸ்திரியா நாட்டுக்கு தற்பொழுது ஹனிமூன் சென்றுள்ளார். 12 டிகிரி குளிரில் நடுங்குவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .மேலும் அவர் அங்கு எடுத்த தனது ஹனிமூன் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்….