தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நீண்ட காலமாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்ததால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி தொண்ணூறுகளில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். அதே சமயம் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா மற்றும் விஜய் உள்ளிட்ட இளம் நடிகர்களின் படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர் சின்ன திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். அதே சமயம் பாத்திமா விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவா இருக்கும் பாத்திமா பாபு தற்போது சூரியகாந்தி தோட்டத்தில் நின்று 90s பாடலுக்கு வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
