'கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறீங்க.. கொஞ்சம் அவங்களுக்கும் குடுங்க'... பெரிய ஹீரோக்களை பார்த்து கொந்தளித்த டிஸ்கோ சாந்தி... - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

‘கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறீங்க.. கொஞ்சம் அவங்களுக்கும் குடுங்க’… பெரிய ஹீரோக்களை பார்த்து கொந்தளித்த டிஸ்கோ சாந்தி…

CINEMA

‘கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறீங்க.. கொஞ்சம் அவங்களுக்கும் குடுங்க’… பெரிய ஹீரோக்களை பார்த்து கொந்தளித்த டிஸ்கோ சாந்தி…

70ஸ் இளசுகளை கவர்ந்திழுத்த கவர்ச்சி கன்னி சில்க்கிற்கு நிகராக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர்  டிஸ்கோ  சாந்தி. இவரின் நடனம் 80களில் மிகவும் பிரபலம். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும்,  நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

வெள்ளை மனசு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர்  ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார். இறுதியாக 1996-ம் ஆண்டு துறைமுகம் என்னும் படத்தில் தோன்றியிருந்தார் டிஸ்கோ சாந்தி.

தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் தான் பட்ட கஷ்டங்களை பற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘சினிமாவில் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளவிலான மதிப்பையே தான் பெற்றதாகவும், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு சம்பளமும் சரியாக கிடைக்காது.

உணவுகளும் சரியாக வழங்கப்படாது. ஆனால் பெரும் நடிகர்கள் இப்போதெல்லாம் 100 கோடி முதல் 150 கோடி என சம்பளம் வாங்குகின்றனர். இவர்கள் நினைத்தால் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் களுக்கு ஒரு தொகையை தங்களது சம்பளத்திலிருந்து கொடுக்கலாம். ஆனால் அவர்கள் கொடுப்பதில்லை என ஆவேசமாக கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top