90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், பெங்காளி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் தேவயானி ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னை வைத்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். திருமணமான பிறகு தேவயானி பல சீரியல்களிலும் நடித்து வந்தார்.
தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் 6 வருடம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலிலும் தேவயானி நடித்தார். இப்போதும் அவர் சீரியலில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். ஆனால் ராஜகுமாரனுக்கு அதன் பிறகு இயக்குனராகும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது தேவயானியின் இரண்டு மகள்களும் வளர்ந்து இப்போது பதின் பருவத்தை எட்டியுள்ளனர். இணையத்தில் தேவயானி தன் மகள்களோடு இருக்கும் புகைப்படம் கவனம் பெற்றது.
இந்நிலையில் தேவயானியின் இளையமகள் இனியா தனக்கிருந்த தாழ்வு மனப்பாண்மை பற்றி பேசியுள்ளார். அதில் “நான் என் அக்காவை போல அழகாக உயரமாக இல்லை என்று தாழ்வு மனப்பாண்மையில் இருந்தேன். அதை என் அப்பாவிடம் சொன்னபோது அவர்தான் எனக்கு நம்பிக்கை அளித்தார். அவர் என்னிடம் சரிதா மேடம், ரேவதி மேடம் எல்லாம் பார், அவர்கள் எல்லாம் தங்கள் திறமையைக் காட்டிதான் இத்தனை ஆண்டுகளாக திரையுலகில் நிலைத்திருக்கிறார்கள்.
அதே போல நீயும் உன் திறமையை வளர்த்துக்கொள் என அட்வைஸ் செய்தார். அவரின் அந்த வார்த்தைகள்தான் எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தன” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் விரைவில் தேவயானியின் மகள்கள் நடிகைகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.