‘மஜா’ பட நடிகை அனு பிரபாகர் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?… இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறாங்களே… நீங்களே பாருங்க…

By Begam

Published on:

தமிழில் மஜா, அற்புதம், அன்னை காளிகாம்பாள் போன்ற திரைப்படங்களில் நடித்து  பிரபலமானவர் நடிகை அனு பிரபாகர். இவர் கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரது தாயார் காயத்ரி கன்னடத்தில் பிரபல நடிகை. நடிகை அனு பிரபாகருக்கும் கிருஷ்ணகுமாருக்கும் 2002ல் திருமணம் நடந்தது.

   

ஆனால் கருத்து வேறுபாட்டால் இருவரும் 2014 ல் விவாகரத்து பெற்றனர். பின்னர் நடிகர் ரகு முகர்ஜியுடன் அனுவுக்கு காதல் ஏற்பட்டது. ரகு முகர்ஜி ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்துவிட்டு பாவனா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

பின்னர் பாவனாவையும் விவாகரத்து செய்து விட்டார். அனுவுக்கு இது இரண்டாவது திருமணம். ரகுவுக்கு இது மூன்றாவது திருமணம். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சமீபத்தில் இவர் தனது முதல் திருமண விவாகரத்து பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த பேட்டி இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நடிகை அனுபுரபாகரனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘மஜா பட நடிகையா இவர்? இன்னும் அப்படியே இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.