விஜயின் ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் நடித்த நடிகையா இவர்?… இரண்டாவது திருமணம் செய்து இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் வெற்றிப்பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று ‘பூவே உனக்காக’. இத்திரைப்படம் 1996 இல் வெளிவந்து சூப்பர் ஹிட் அடைந்தது. இந்த படம் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படம். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் விஜய் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிப்பார்.

   

அந்த நடிகையின் பெயர் அஞ்சு அரவிந்த். ‘பூவே உனக்காக’ திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்த இவர் 2001க்கு பிறகு எந்த தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் மலையாள படங்களில் மட்டும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இவர் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், அருணாச்சலம் என சில ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி உள்ளார்.

நடிகை அஞ்சு அரவிந்த் தேவதாஸ் என்பவரை 2002ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான இரண்டு வருடங்களிலேயே 2004ல் விவாகரத்து பெற்றார். இதை தொடர்ந்து 2006ல் வினயச்சந்திரன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது அன்விதா வினயன் என்ற ஒரு மகள் உள்ளார். தற்பொழுது இவரின் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம்….