Connect with us

Tamizhanmedia.net

புது மணபெண் போல.. பட்டுப்புடவை, கையில் மருதாணி என அழகாய் ஜொலிக்கும்  நடிகை அஞ்சலி.. கல்யாண கலை வந்துடுச்சே..

CINEMA

புது மணபெண் போல.. பட்டுப்புடவை, கையில் மருதாணி என அழகாய் ஜொலிக்கும்  நடிகை அஞ்சலி.. கல்யாண கலை வந்துடுச்சே..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் 2007ல் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்றார்.

இதைத்தொடர்ந்து ‘அங்காடி தெரு’ இவரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம். கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதைக்களம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில்  வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.

இவர் தற்பொழுது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரீஸ்களிலும் அதிகம் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ஃபால்(Fall) என்ற வெப் சீரியஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து நடிகை அஞ்சலி பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை அஞ்சலிக்கு கடந்த சில மாதங்களாகவே, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டு வரும் நிலையில், தற்போது திருமண கோலத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top