Connect with us

‘வருஷமெல்லாம் வசந்தம்’ பட நடிகையை உங்களுக்கு ஞாபகமிருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

TRENDING

‘வருஷமெல்லாம் வசந்தம்’ பட நடிகையை உங்களுக்கு ஞாபகமிருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பாஞ்சாபி என பல மொழிகளில் 60க்கும் மேற்ப்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி. இவர் விக்ரம் நடிப்பில் 2002ல்  வெளியான சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 20 வயதில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘கபி சவுதம் கபி’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

   

அதன்பின்னர் தமிழில் அறிமுகமானது சாமுராய் படத்தில் தான். சாமுராய் படத்திற்கு முன்பாகவே இவர், மனோஜுடன் நடித்த ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படம் வெளியாகி இருந்தது. சாமுராய் மற்றும் வருஷமெல்லாம் வசந்தம் படத்திற்கு பின்னர் ரவி கிருஷ்ணா நடித்த ‘சுக்ரன்’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்த படத்தினை இளைய தளபதி விஜய்யின் தந்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் அனிதாவை அறிமுகம் என்று டைட்டிலில் அறிவித்திருந்தார் எஸ் ஏ சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. சுக்ரன் படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை.

தமிழில் வாய்ப்புகள் இல்லாத போதும் இவருக்கு இந்தி, கன்னடம், பஞ்சாபி என்று பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். பின்னர் 2013ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார் அனிதா.

இவருக்கு தற்பொழுது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.  சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவையே நடிகை அனிதா. இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top