தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன. அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள்.
அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள். அந்தவகையில் இவர் இயக்கிய சேது திரைப்படம் பல போராட்டங்களைக் கடந்து 3 ஆண்டுகள் உருவாக்கப்பட்டு ரிலீஸானது. விக்ரம் வாழ்க்கையில் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. விக்ரம் என்ற பட்ட பெயரை கொடுத்ததும் இந்த படம் தான்.
இந்த படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கேரக்டரில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு எதிர்பார்த்த அளவிற்கு பெரிய ஹிட் படங்கள் எதுவும் இவருக்கு அமையவில்லை. தமிழில் சீறிவரும் காளை, பூவே பெண் பூவே போன்ற படங்களில் நடித்தார் .அதன் பிறகு சினிமா வாய்ப்பு குறைந்ததால் சீரியல் பக்கம் திரும்பினார். திருமதி செல்வம் சீரியலில் நடித்து மெகா ஹிட் ஆனது.
அதன் பிறகு ஒரு சில தொடர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் வணங்கான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மேடையில் பேசிய அபிதா சேது படம் குறித்து பேசி உள்ளார் .அதாவது, “பாலா சாரின் சேது படத்தில் நடிக்கும் பொழுது ஒழுங்காக டான்ஸ் ஆட வரலைன்னு எல்லார் முன்னாடியும் என்னை திட்டுவார் .நான் ரொம்பவே அழுதிருக்கிறேன். அதன்பிறகு என்னை கூப்பிட்டு இப்பொழுது ஒழுங்காக நடிச்சா தான் முன்னேற முடியும். பின்னாடி நீ பெரிய ஆளா வருவ என்று கூறுவார். அவர் எப்பொழுதுமே அதிகமாக பேச மாட்டார் “என்று கூறியுள்ளார்