‘கழுத்துல மஞ்சள் கயிறு… உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?’… பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட புகைப்படம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘நோட்டா’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

   

இவர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பிரபலத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அபிராமி. இவர் ‘முரட்டு சிங்கிள்’ என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் சினிமா, பிசினஸ் என பிசியாக உள்ளார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அபிராமி. சமீபத்தில் கூட இவர் தனது முதுகில் நடராஜர் சிலை குத்திய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இதைத்தொடர்ந்து கைக்கிடையில் ராஜநாகம் டாட்டூவை காண்பித்த போஸ் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை அதிர்ச்சியாக வைத்தார்.

தற்பொழுது இவர் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் எடுத்துக்கொண்டு புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார் .இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘எப்போ உங்களுக்கு திருமணம் ஆச்சு?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…