‘என் கணவர் அப்படி சொல்வார்னு எதிர்பார்க்கல’.. கண்கலங்கிய விருமாண்டி பட நடிகை அபிராமி..

By Deepika

Updated on:

தமிழில் வானவில் படம் மூலம் அர்ஜுனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை அபிராமி. அதைத்தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் என பல படங்களில் நடித்தார். கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிசியாக நடித்து வந்தார் அபிராமி.

Abhirami in virumandi

2004 ஆம் ஆண்டு கமலுக்கு ஜோடியாக இவர் நடித்த விருமாண்டி படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் இவர் ஏற்று நடித்த அன்னலட்சுமி கதாப்பாத்திரம் இன்றும் பலரின் பேவரைட்டாக உள்ளது. பீக்கில் இருந்த சமயத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அபிராமி வெளிநாடு சென்று செட்டிலானார்.

   
Actress abhirami

2015-ம் ஆண்டில் வெளியான ’36 வயதினிலே’ மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த அபிராமி, சினிமாவில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து தக் லைப் படம் மூலம் கமலுடன் நடித்து வருகிறார். இந்தநிலையில் தன்னுடைய திருமணம் குறித்தும் கணவர் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் அபிராமி.

Abhirami marriage

அவர் கூறியுள்ளதாவது, நான் மிகசிறந்த நபரை திருமணம் செய்துள்ளேன். என் கணவர் ராகுல் மிக நல்லவர், இப்படி ஒரு நல்ல மனிதன் எனக்கு வாழ்க்கை துணையாக கிடைப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பிடித்த விஷயங்களை செய்ய சொல்வார், என்னக்கு ஆதரவாக இருப்பார். நான் குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என சொன்னதற்கு கோடா உடனே சம்மதம் தெரிவித்தார்.

Abhirami family

குழந்தையை தத்தெடுத்து வீட்டிற்கு கொண்டு வந்த இரண்டு வாரங்களில் தான் இந்த சம்பவம் நடந்தது. எங்கள் இருவருக்குமே இது புதிது. குழந்தை அலுத்து கொண்டே இருந்தால் அப்போது என் கணவர் ராகுல் என்னை அழைத்து, குழந்தை வளர்ப்பதில் நாம் இருவருக்குமே பங்கு உண்டு. குழந்தையை பொறுமையாக கையாள வேண்டும், நீ பொறுமை இழந்து கோபம் வருவது போல் தோன்றினால் உடனே என்னை கூப்பிடு, நான் பார்த்து கொள்கிறேன்.

Abhirami family

அதேபோல் எனக்கு கோபம் வந்தால் நான் உன்னை அழைப்பேன். நம் கோபம் குழந்தையின் மேல் எப்போதும் வர கூடாது. நாம் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என கூறினார். எவ்வளவு அழகான கருத்துக்கள் அவை, நான் என் கணவரை நினைத்து சந்தோஷப்பட்டேன். இப்போதும் குழந்தையை அவ்வளவு அழகாக பார்த்து கொள்வார், நான் அதிர்ஷ்டஷாலி என கூறியுள்ளார் நடிகை அபிராமி.

author avatar
Deepika