தமிழ் சினிமாவில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் ஆகியோர் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். முன்னணி நடிகர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர்களின் அனைத்து படங்களும் வெற்றி பெறும் என சொல்ல முடியாது. அடுத்தடுத்த வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது படத்தின் கதை அம்சம் தான். இந்த நிலையில் ஒவ்வொரு நடிகர்களின் 50வது படம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50-வது படம் நான் வாழ வைப்பேன். இந்த படத்தை யோகானந்த் இயக்கினார். இதில் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 1979 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது உலகநாயகன் கமல்ஹாசனின் ஐம்பதாவது படம் மூன்று முடிச்சு. இந்த படம் 1976 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
அடுத்ததாக அஜித்குமாரின் 50-வது படம் மங்காத்தா. அஜித்தின் மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். மங்காத்தா படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் 2011-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. தளபதி விஜயின் 50-வது படம் சுறா. இந்த படம் 2011- ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விஜயின் சுறா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
விக்ரமின் ஐம்பதாவது படம் ஐ. இந்த படம் 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விக்ரமின் ஐ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்த இது விக்ரமின் ஐம்பதாவது படமாகும் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆனது. ஐ திரைப்படமும் மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.