ஹீரோவாக களமிறங்கும் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி… அதுவும் இந்த பிரபல இயக்குனரின் திரைப்படத்திலா..?

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க, லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

   

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மட்டுமின்றி ஒரு சில படங்களை தயாரித்தும் வருகிறார். இதற்காக அவர் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இதன் மூலம் தனது திரைப்படங்களான மோகன்தாஸ், எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

இப்படி திரையுலகில் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்த படம் நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவையும் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி அவர் தனது தம்பியின் முதல் படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் முடிவு செய்திருந்தார்.

இதற்காக நல்ல கதை இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு  ட்விட்டரில் அவர் இயக்குனர்களுக்கு ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில்,  இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் தற்பொழுது நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா ஹீரோவாக களமிறங்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ என்று பெயரிட்டுள்ளனர்.   இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் ஏற்கெனவே ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by S W A N K. (@swank.in)