CINEMA
இவ்ளோ effort-ஆ…? ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்காக உயிரை பணயம் வைத்த நடிகர் விஷால்… வெளியான நெஞ்சை பதற வைக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ…
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் மார்க் ஆண்டனி. கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்தன. இந்நிலையில், எப்படியாவது ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து போராடி வந்தார் விஷால்.
இந்நிலையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதற்கு காரணம் இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் போட்டதுதான் என ஒட்டுமொத்த ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ‘பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு கேக்குதா’ என்கிற காட்சிகள் மற்றும் பேருந்தில் சில்க் ஸ்மிதாவை பார்த்தவுடன் எஸ் ஜே சூர்யா ஆளே மாறி நடிக்கும் நடிப்பு எல்லாம் பார்த்த ரசிகர்கள் அவரை நடிப்பு அரக்கன் என பாராட்டி வருகின்றனர்.
சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாளில் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி, முதல் நாளிலேயே 6.50 கோடி ரூபாய் வசூலை எட்டியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது வரை வசூல் வேட்டை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷால் இத்திரைப்படத்திற்க்காக தன்னால் முடிந்த வரை கடினமாக உழைத்துள்ளார். தற்பொழுது அவர் மீது ஷூட்டிங் ஸ்பாட்டில் வேன் ஒன்று மோத வருவதும், நொடிப்பொழுதில் அவர் உயிர் தப்பும் காட்சியும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…