திருச்செந்தூர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகர் விமல்….. வைரலாகும் புகைப்படங்கள்…

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் விமல்.

   

இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கிரீடம்,குருவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தார். இவர் முதல் முதலாக 2009 ஆம் ஆண்டு பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து களவாணி,கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகராக நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விலங்கு இணைய தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் சுமார் ஏழு திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டாக்டர் படிப்பு படித்துக் கொண்டிருந்த அக்ஷயாவை அவரின் பெற்றோர் டாக்டருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டு உள்ளனர்.

ஆனால் விமல் மற்றும் அக்ஷயா இருவரும் ஏற்கனவே காதலித்து வந்ததால் கோவிலில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார் நடிகர் விமல்.

அப்போது நடிகர் விமல் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana