நடிகர் விமலின் அழகிய குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?… இதுவரை நீங்கள் பார்த்திடாத லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

நடிகர் விமலின் அழகிய குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?… இதுவரை நீங்கள் பார்த்திடாத லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி கில்லி, குருவி, கிரீடம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். சினிமாவில் பல போராட்டங்களை கடந்து தற்போது இவர் கதாநாயகனாக விளங்கி வருகிறார். இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘களவாணி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கிராமத்து கதை அம்சம் கொண்ட இந்த படம் மக்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது.

இதைத்தொடர்ந்து தூங்கா நகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது வலம் வந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘விலங்கு’ வெப் சீரியஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து ‘விலங்கு’ வெப் சீரியஸ் சீசன் 2 விரைவில் வெளியாகும் என்றும் இணையத்தில் கூறப்பட்டு வருகிறது.

நடிகர் விமல் 2010ல்  இவரது மாமா பொன்னான பிரியதர்ஷினியை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.  தற்பொழுது நடிகர் விமல் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கோவிலுக்கு வந்த பொழுது எடுக்கப்பட்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்…

Begam