தமிழ் சினிமாவின் இரண்டாம் நிலை நடிகர்களில் ஒருவர் விமல். கூத்துப் பட்டறையில் படித்த இவர் பல படங்களில் துணை நடிகராகத் தோன்றி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பசங்க படம் மூலமாகக் கவனம் பெற்றார். அடுத்தடுத்து அவர் நடித்த களவாணி, வாகை சூடவா மற்றும் தேசிங்கு ராஜா ஆகிய படங்கள் அவரை கவனிக்கத்தக்க நடிகராக்கின. சில ஆண்டுகளுக்கு முன்னர் விலங்கு என்ற வெப்சீரிஸ் மூலம் அவர் ஓடிடி உலகிலும் கால்பதித்தார். இப்படி வெற்றிகரமாக நடிகராக அவர் வலம் வந்தாலும் அவரால் முன்னணி நடிகராக வரமுடியவில்லை.
அதற்கு இடையில் அவர் தேர்வு செய்த சில மோசமான படங்கள்தான் காரணம். ஆனால் இப்போது சார் போன்ற படங்களில் நடித்து கம்பேக் கொடுக்க முயன்று வருகிறார். விமல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள பணங்கொம்பு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த விமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடனம் கற்க தொடங்கினார். சினிமாவில் வாய்ப்பு தேட வேண்டும் என்று சென்னைக்கு குடி பெயர்ந்தார்.
சினிமாவில் சில படங்கள் நடித்தபோது அவர் தன்னுடைய முறைப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தற்போது விமல் ஓம் காளி ஜெய் காளி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் நடிகர் விமல் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க