சிவகார்த்திகேயன்-AR முருகதாஸ் கூட்டணியில் இணைந்த மற்றொரு பிரபலம்.. அப்ப வேற லெவல் சம்பவம் காத்திருக்கு போலயே..!

By Mahalakshmi on ஆனி 15, 2024

Spread the love

ஏஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் எஸ்கே 23 திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் இணைய உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராணுவ கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

   

   

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் அதிகபட்சமாக எடுத்து முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட படங்களிலும் இப்படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் எஸ் கே 23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். ஆக்சன் என்டர்டைன்மென்ட் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் இணைந்திருக்கின்றார். இது தொடர்பான அறிவிப்பு கூட சமீபத்தில் வெளியானது.

அதாவது துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த வித்யுத் ஜம்பால் நடிக்க இருக்கின்றார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டு இருந்தார்கள். விரைவில் இப்படத்தின் சூட்டிங் முடித்துவிட்டு ஏ ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் இணைய இருக்கின்றார். இந்நிலையில் அடுத்ததாக புது அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கின்றது. இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ராந்த் நடிக்க இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான விக்ராந்த் இந்த திரைப்படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.