அட இவர்கள்தான் நடிகர் விக்ரமின் மகள் மற்றும் மருமகனா?… பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரை பயணத்தை தொடங்கினார். இவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இவர் நடிப்பில் உச்சத்தை தொட்டவர். கொடுக்கப்படும் கதாபாத்திரமாகவே மாறி தனது முழு உழைப்பையும் போட்டு நடிப்பார்.

   

இவர் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.  இப்படத்தில் இவர் ஏற்று நடித்த ‘ஆதித்த கரிகாலன்’ கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ‘தங்கலான்’ திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இத்திரைப்படத்தில் இவருடைய கெட்டப் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த கெட்டப்பை பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் ரிலீசாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விக்ரமுக்கு துரு விக்ரம் என்ற மகன் இருப்பதை நாம் அறிவோம். இவரும் திரையுலகில் ஒரு வளரும் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார்.  அதேபோல் விக்ரமுக்கு  அக்ஷிதா என்ற மகளும் உள்ளார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்னர் மனோரஞ்சித் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு அழகிய மகளும் உள்ளார்.

நடிகர் விக்ரம் மகள் மற்றும் மருமகனின் அழகிய புகைப்படம் இதோ…