பிரபல நடிகையின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பம்… ஓடோடி வந்து உதவிய நடிகர் விஜயகாந்த்…

பிரபல நடிகையின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பம்… ஓடோடி வந்து உதவிய நடிகர் விஜயகாந்த்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இன்று வரை நீங்காத இடத்தை பிடித்துள்ளார். மேலும் தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என்றும் கொண்டாடப்பட்டு வருகிறார். சமீப காலமாக நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் இருந்து கொண்டே சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் தற்பொழுது படங்களிலும் அரசியலிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் வருடத்திற்கு ஒரு முறையாவது தன்னுடைய தொண்டர்களையும் ரசிகர்களையும் தனது இல்லத்தில் சந்தித்து விடுவார் விஜயகாந்த். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவிற்கு நடிகர் விஜயகாந்த் உடல் மெலிந்து காணப்பட்டார்.

தற்பொழுது நடிகர் விஜயகாந்த் திரையில் மிகவும் போல்டான மனிதராக நடித்திருந்தாலும், இவர் மிகவும் இரக்க குணம் கொண்டவர். சினிமாவில் கஷ்டப்பட்ட பலருக்கும் உதவி செய்தவர். தற்பொழுது இவரது இரக்க குணத்திற்கு சான்றாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இவர் திரையுலகில் படகியாகவும், பிரபல நடிகையாகவும் வலம் வந்த தேனி குஞ்சரம்மாள் அவர்களின் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல், அவரது குடும்பம் தவித்த போது உதவி செய்துள்ளார்.

பிரபல நடிகர் மீசை ராஜேந்திரனிடம் குஞ்சரம்மாள் மரணத்தின் செலவுக்காக ரூபாய் 10 ஆயிரத்து கொடுத்து அவர்கள் குடும்பத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனை நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியதன் மூலம் இத்தகவல் நமக்குத் தெரியவந்துள்ளது. எத்தனையோ பேருக்கு உதவி செய்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது இவ்வாறு உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டு கொண்டிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Begam