கால்ஷூட் முதல் சம்பளம் வாங்குவது வரை விஜயகாந்த்-க்கு எல்லாமே இவர்தான்.. யார் இந்த ராவுத்தர்..??

By Nanthini on மார்கழி 4, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றும் கேப்டன் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவரது வாழ்க்கையில் ஒருவரின் நட்பு இன்றியமையாததாக இருந்துள்ளது. அதாவது கேப்டனின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சியில் இப்ராஹிம் ராவுத்தர் முக்கிய பங்கு வகித்தார். விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இவர் விஜயகாந்துடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தார். விஜயகாந்துக்கு மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் கிடைத்து நடிக்க தொடங்கியதும் அவர் நடிக்கும் திரைப்படங்களை முடிவு செய்யும் நபராக ராவுத்தர் மாறினார். அவர் கதையைக் கேட்டு அது விஜயகாந்திற்கு ஏற்ற திரைப்படமா என முடிவு செய்வார்.

   

எந்த ஒரு இடத்திலும் விஜயகாந்த் அவரின் பேச்சை தட்டவே மாட்டார். அப்படிதான் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை விஜயகாந்த் கொடுத்தார். வில்லனாக நடித்த விஜயகாந்த் ஹீரோவாகவும் அதன் பிறகு ஆக்சன் கதைகளில் நடிக்க வைத்து அவரின் இமேஜை மாற்றியதில் ராவுத்தருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒரு திரைப்படம் வெற்றி படமாக அமையும் என்பதில் தொடங்கி கால் சூட் கொடுப்பது மற்றும் சம்பளம் பெறுவது என அனைத்து வேலைகளையும் ராவுத்தர் கவனித்து வந்தார். விஜயகாந்தின் சினிமா கேரியரை வடிவமைத்து மொத்தமாக இயக்கியவர் இவர்தான்.

   

 

 

தன் நண்பனின் பேச்சை தட்ட கூடாத என்பதற்காக விருப்பமே இல்லை என்றாலும் ராவுத்தர் சொன்ன வார்த்தைக்காக விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக புலன் விசாரணை திரைப்படத்தில் கட்டாயம் விஜயகாந்த் நடித்த தீர வேண்டும் என ராவுத்தர் கண்டிஷன் போட்டதால் அவர் நடித்து முடித்தார். விஜயகாந்தின் திருமணத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் திடீரென ஒரு சரிவு ஏற்பட்டது. திடீரென வறுமை நிலைக்கு சென்றபோது ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் அளவுக்கு நிலைமை மாறிய போது கூட ராவுத்தர் விஜயகாந்த் உடன் தான் இருந்தார்.

அந்த சமயத்தில் ரஜினியின் முரட்டுக்காளை திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்திற்கான செக்கை விஜயகாந்த் பெற்று கொண்ட நிலையில் ராவுத்தர் அந்த திரைப்படத்தில் நீ நடிக்க கூடாது ஹீரோவாக நடித்த பிறந்தவன் நீ வில்லனாக நடிக்க கூடாது என கூறியதால் அந்த காசோலையை திருப்பிக் கொடுத்துவிட்டு விஜயகாந்த் அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை . விஜயகாந்தை நடிகர் என்பதை தாண்டி அரசியல் தலைவராக அணு அணுவாக செதுக்கியதில் ராவுத்தர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

விஜயகாந்தின் நடை மற்றும் உடையை மாற்றியதில் இருந்து அவருக்கு கேப்டன் என பெயர் வைத்தது வரை இவரின் பங்கு அளப்பரியது. ஆனால் திருமணத்திற்கு பிறகு இவரின் நட்பில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட அரசியல் நகர்வுகளும் அவருக்கு பிடிக்காமல் போக இவர்கள் என் நட்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. இருந்தாலும் இன்று வரை கோலிவுட்டில் நட்பின் இலக்கணமாய் விளங்கிய இவர்களது நட்பு தமிழ் சினிமா வரலாற்றில் நினைவு கூறப்படுகிறது.