விஜய் சேதுபதி 2010 ஆம் வருடம் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு பல கதாபாத்திரங்களில் நடித்த அவர் முதன்முதலாக மகாராஜா படத்தில் அப்பா வேடத்தில் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார். அதற்காக சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். இதற்காக 60 கோடி சம்பளம் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய தொகை தான். பிறகு மாஸ்டர், விக்ரம், விக்ரம் வேதா போன்ற படங்களில் வில்லனாக நடித்து அசத்திய இவர் சில நாட்களுக்கு முன்பு இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார்.
ஆனால் தற்போது ஒரு படத்தில் வில்லனாக நடிக்க கேட்டபோது பெரிய ஹீரோவின் படம் என்பதால் சற்றும் தயங்காமல் ஒப்புக் கொண்டுள்ளாராம் விஜய் சேதுபதி. தெலுங்கு படம் நடிகர் பிரபாஸ்நடிப்பில் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு 5 மொழியில் வெளியாக இருக்கும் ஸ்பிரிட் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் இவருக்கு 21 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. சினிமாவில் தற்சமயம் இருக்கும் ஹீரோக்களுக்கே சம்பளம் குறைவாக இருக்கும் நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இதனால் இவருடைய நடிப்பு இந்த படத்தில் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
