Connect with us

எம்.குமரன் படத்தில் எனக்கு இவ்ளோதான் சம்பளம்.. ஆனா ரூ.150 இன்கிரிமெண்ட்.. நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த நினைவுகள்…!!

CINEMA

எம்.குமரன் படத்தில் எனக்கு இவ்ளோதான் சம்பளம்.. ஆனா ரூ.150 இன்கிரிமெண்ட்.. நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த நினைவுகள்…!!

 

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவான இறைவன் படத்தை அகமத் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நேற்று சென்னையில் வைத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி கூறியதாவது, நான் அஹமத் சார் கூட வேலை செய்தது இல்லை. இரண்டு மூன்று முறை மட்டுமே அவரை சந்தித்து இருக்கிறேன்.

   

அவர் படத்திற்கு வைக்கின்ற டைட்டில் எல்லாமே பிரமாதமாக இருக்கும். இப்போது இறைவன் என்ற டைட்டிலும் எனக்கு பிடித்திருக்கிறது. இறைவன் என்று சொன்னாலே எல்லோருக்கும் ஒரு சாந்தமான நம்பிக்கையான விஷயங்களை தரக்கூடிய வார்த்தை. இப்போது அந்த வார்த்தையை வைத்து எல்லோரையும் பயமுறுத்தி இருக்காரு. இவர் கூட பழகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்கணும்.

படத்தின் புட்டேஜ் பயமுறுத்துற மாதிரி இருந்தாலும் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நான் சினிமாவுக்கு வரவேண்டும் என நினைத்து முயற்சி செய்து கொண்டிருந்தபோது மோகன் ராஜா தன்னுடைய ஆபீசுக்கு சென்றேன். அங்கு ஜெயம் ரவி சாரை பார்த்தேன். நான் பார்த்த முதல் நடிகர் ஜெயம் ரவி தான். எனது முதல் படத்திற்கு 250 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். எனது இரண்டாவது படத்திற்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அதுவே எனக்கு  மிகப்பெரிய இன்கிரிமன்ட் மாதிரி இருந்தது.

அதில் ஜிம் பாய் ரோலில் நடிக்க வேண்டும் என சொன்னார்கள். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவி சார் மேலே நின்று கொண்டிருந்தபோது நான் கீழே நின்று அதனை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த காட்சி படத்தில் இருந்தது. போகன் படத்தில் அவருடன் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தும் டேட் பிரச்சினை காரணமாக என்னால் அதில் நடிக்க முடியவில்லை. இனிமேல் வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் சார் என கூறியுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top