இந்த சிறு வயது புகைப்படத்தில் மாஸாக போஸ் கொடுத்துள்ள டாப் நடிகர் யார் தெரியுமா?… இதோ பாருங்க…

இந்த சிறு வயது புகைப்படத்தில் மாஸாக போஸ் கொடுத்துள்ள டாப் நடிகர் யார் தெரியுமா?… இதோ பாருங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்பொழுது கோலிவுட்டின் படுபிஸியான நடிகர் என்று யாரைக்கேட்டாலும் நடிகர் விஜய் சேதுபதியின் பெயரை தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோ தான் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கை நிறைய படங்கள் இருக்கிறது.

இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் டிஎஸ்பி. இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம், காத்து வாக்கு ரெண்டு காதல் போன்ற  திரைப்படங்கள் வெற்றிகரமான படங்களாக அமைந்துள்ளது.

இவர் தற்பொழுது வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் கால் பதித்து நடித்து அசத்தி வருகிறார். இவர் தற்பொழுது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி காந்தி டாக்ஸ், விடுதலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் ஜவான், விடுதலை போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சமீப காலமாகவே நடிகர் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி செம மாஸ் கொடுத்துள்ளார். இதோ அவரின் சிறு வயது புகைப்படம்…

Begam