பாலிவுட்டில் பிரபல நடிகரான வருண் தவானுக்கு மகள் பிறந்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கின்றார். பாலிவுட் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் வருண் தவான். இவர் தனது நீண்ட நாள் காதலியான நடாஷா த்லால் என்ற நபரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது குழந்தை பிறந்திருக்கின்றது. தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் வருண் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கின்றார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் வரும் வருண் பேபி தவான் என்று பதிவேற்றுகின்றார்.
மேலும் குழந்தையும் தன் மனைவி நடாஷாவும் நலமுடன் இருப்பதாக கூறி இருக்கின்றார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் நடிகர்கள் சமந்தா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தற்போது நடிகர் வருண் தவான் பேபி ஜான் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்க உள்ளார். மேலும் தமிழில் நடிகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் வரும் தப்பான கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கின்றார். இதன் மூலமாக கீர்த்தி சுரேஷ் பாலிவுட் ஹீரோயின்-ஆக அறிமுகமாக உள்ளார். நேற்று சிவகார்த்திகேயன் தனக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதை தெரிவித்த நிலையில் நடிகர் வரும் வருண் இன்று காலை தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியாக வெளியிட்டு இருக்கின்றார்.