நகைச்சுவை நடிகர்களுக்கு மிகவும் முக்கியமான இரண்டு விஷயங்கள் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு ஆகியவைதான். இந்த இரண்டிலும் உச்சம் தொட்டவர் வடிவேலு. அதனால்தான் 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்தார். ஆனால் 2011 ஆம் ஆண்டு அவர் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய இடைவெளி விழுந்தது.
ஆனாலும் அவரின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் சோஷியல் மீடியா மூலமாக மீம்களாக வைரல் ஆகிவருகின்றன. சமீபத்தில் அவர் நகைச்சுவையே செய்யாமல் நடித்திருந்த மாமன்னன் திரைப்படத்தில் கூட அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இத்தனை பாசிட்டிவ்வான அம்சங்கள் வடிவேலுவிடம் இருந்தாலும் அவரிடம் பல நெகட்டிவ்வான விஷயங்களும் உள்ளதாக அவரோடு பணியாற்றியவர்கள் புகார் சொன்ன சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில் வடிவேலு பற்றி நடிகர் காதல் சுகுமார் சொன்ன சம்பவம் ஒன்று அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. சுகுமார் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். சில படங்களிலும் நடித்து வந்துள்ளார். பார்ப்பதற்கு கொஞ்சம் வடிவேலு போலவே இருக்கும் அவர் உடல்மொழியிலும் சில காட்சிகளில் வடிவேலுவை இமிடேட் செய்துள்ளார். இது ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
ஆனால் இது வடிவேலுவுக்கு பிடிக்கவில்லையாம். ஒரு நாள் சுகுமாரை அழைத்துள்ளார். சுகுமாரும் ஆசையாக வடிவேலுவைப் பார்க்க சென்றுள்ளார். அப்போது ஒரு விபத்து காரணமாக வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். அவரை சுற்றியும் அவரோடு நடிக்கும் நடிகர்கள் இருந்துள்ளனர். முதலில் பாசமாக அனைவரும் பேசியுள்ளனர்.
திடீரென்று கோபமான வடிவேலு “என்ன எல்லா படத்திலயும் என்ன மாதிரியே நடிக்கிறீயாம்?” எனக் கேட்டுள்ளார். அதற்கு சுகுமார் பதில் சொல்வதற்குள் சுற்றி இருந்தவர்கள் அவரைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். வெளுத்து வாங்கி விட்டு அவரிடம் இனிமேல் ‘நான் வடிவேலு மாதிரி நடிக்க மாட்டேன்” என எழுதி வாங்கிவிட்டு அன்ய்ப்பியுள்ளனர்.
இதைப் பல ஆண்டுகளுக்கு பிறகு சுகுமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். சுகுமார் சொன்ன தகவல் வடிவேலுவுக்கு இப்படி ஒரு முகம் இருக்கா என ஷாக் ஆகியுள்ளனர்.