10 வயதிலேயே தேசிய விருது.. காணாமல் போன “எனக்கு 20 உனக்கு 18 பட நடிகர்”.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா..?

By Nanthini on ஆகஸ்ட் 29, 2024

Spread the love

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சினிமாவில் கலக்கிய பிரபலங்கள் பலரும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நடிகர் தருண். 1990களில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கானாவை சேர்ந்த இவருக்கு முதல் திரைப்படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்கான தேசிய விருது 10 வயதில் கிடைத்தது.

   

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் முதலாக ஹீரோவாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில் அதிகமான திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென பெயரை பெற்றார். தமிழில் திரிஷாவுடன் இணைந்து இவர் நடித்த எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சாக்லேட் பாய் நடிகர் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட இவர் தமிழில் புன்னகை தேசம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

   

 

அதன் பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் தற்போது கொஞ்சம் குண்டாக ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் நிலையில் தருண் தனது சகோதரியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tharun இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actortarun)