ரசிகர்களிடம் சொன்னதை செய்து காட்டிய நடிகர் சூர்யா.. மற்ற நடிகர்களும் இதுபோல இருந்தால் நல்லா இருக்குமே..!

By Mahalakshmi on ஜூலை 15, 2024

Spread the love

நடிகர் சூர்யா ரத்ததானம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் சூர்யா. தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து நடிக்கக்கூடிய ஒரு நடிகர். தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

   

இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து பாலா உடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்திருந்த இவர் பின்னர் ஒரு சில காரணத்தினால் அப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகளாக எடுக்கப்பட்டு தற்போது தான் முடிவடைந்தது இந்த படம் வருகிற அக்டோபர் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படம் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்துடன் மோத உள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா நற்பணி மன்றம் சார்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரசிகர்கள் அனைவரும் திட்டமிட்டு இருந்தார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 400 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் செய்திருந்தார்கள். பல மாவட்டங்களில் இருந்த ரசிகர்கள் பலரும் இங்கு வந்து ரத்த தானம் செய்திருந்தார்கள்.  மேலும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு எப்போதும் எங்கு தேவைப்பட்டாலும் ரத்ததானம் அளிக்கும் ஒரு அமைப்பை ரசிகர்கள் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த ரத்த தானம் மையத்திலிருந்து ரசிகர் ஒருவர் வீடியோ கால் மூலமாக சூர்யாவிடம் பேசி இருந்தார் .அப்போது சூர்யா தான் தற்போது சென்னையில் இல்லை. கட்டாயம் சென்னை வந்தால் நானும் ரத்த தானம் செய்வேன் என்று கூற நீங்கள் வர வேண்டாம் நாங்களே வருகிறோம் என்று சொல்லி மும்பையில் நடிகர் சூர்யா வசிக்கும் வீட்டிற்கே சென்ற ரசிகர்கள் சூர்யாவிடம் இருந்து ரத்த தானம் பெற்றார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.