தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜயகாந்த்.

கம்பீரமாக திரையில் பார்த்த நடிகர் விஜயகாந்தை, தற்பொழுது இந்த நிலையில் பார்க்கும் அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் தற்பொழுது சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் மருத்துவமனை அவரது உடல்நிலை சீராக இல்லை என அறிக்கை வெளியிட்டதும் ரசிகர்கள் பதறிப்போயினர். இதைத்தொடர்ந்து பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சமீபத்தில் ‘கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்று மருத்துவமனையில் விஜயகாந்த் உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.’ என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
— Suriya Sivakumar (@Suriya_offl) December 3, 2023
