‘டாக்டர் பட நடிகையா? அவர் வேண்டவே வேண்டாம்’… பிரபல நடிகையை தனது படத்தில் கமிட்  செய்த நடிகர் சிவகார்த்திகேயன்… யார் தெரியுமா?…

‘டாக்டர் பட நடிகையா? அவர் வேண்டவே வேண்டாம்’… பிரபல நடிகையை தனது படத்தில் கமிட்  செய்த நடிகர் சிவகார்த்திகேயன்… யார் தெரியுமா?…

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து பல்வேறு கஷ்டங்களை அடைந்த இவர், தற்பொழுது வெள்ளி திரையில் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றது.

ஆனால் இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இவர் தற்பொழுது ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடிகை அதிதியுடன் இணைந்து நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை முடித்த பின்னர் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிய திரைப்படமொன்றில் நடிக்க உள்ளார்.

தற்போது இவர் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் பெரியசாமி இயக்க உள்ளார். இதை தொடர்ந்து தற்பொழுது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இது குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டு முறை ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா மோகன் முதலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிரியங்கா மோகனை வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் மறுத்ததாக தற்பொழுது தகவல்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகை யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை.

‘சீதாராமம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமடைந்து, தற்போது ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்து கொண்டுள்ள நடிகை மிருனாள் தாக்கூர் தான். இத்திரைப்படத்தில் நடிக்க இவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்தான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Begam