‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவில் மாஸாக நடனமாடி ரசிகர்களை வியக்க வைத்த நடிகர் சிம்பு… திடீர்னு வல்லவனாகவே மாறிட்டாரே… வைரல் வீடியோ உள்ளே…

‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவில் மாஸாக நடனமாடி ரசிகர்களை வியக்க வைத்த நடிகர் சிம்பு… திடீர்னு வல்லவனாகவே மாறிட்டாரே… வைரல் வீடியோ உள்ளே…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது பத்து தல திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற மார்ச் 30ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து சிம்புவின் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். படத்தின் ரிலீஸை முன்னிட்டு தற்பொழுது இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், சிம்புவின் தந்தை டி ராஜேந்தர், நடிகர் சிம்பு உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிம்புவின் ரசிகர்களும் பெருமளவில் கலந்து கொண்டதால் நேரு உள்விளையாட்டு அரங்கமே களைகட்டி இருந்தது. பத்து தல திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்பொழுது கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் ‘எஸ் டி ஆர் 48’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இத்திரைப்படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தற்பொழுது புதிய லுக்கில் வலம் வரும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இவர் பத்து தல இசை வெளியீட்டு விழாவிற்கு கோட் சூட் அணிந்து கலந்து கொண்டார்.

மேலும் இவர் வல்லவன் படத்தில் இடம் பெற்ற ‘லூசு பெண்ணே’ பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடி ரசிகர்களை வியக்க வைத்தார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

Begam