நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணத்திற்கு முன்பாக ஜாலியாக ஒரு ட்ரிப் சென்று இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சித்தார்த். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடிப்பதற்கு மிகுந்த முயற்சி செய்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. மேலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கின்றார். இவர் நடிகை அதிதி ராவ் என்பவரை கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை என்ற திரைப்படத்தில் கார்த்தி அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது ஹிந்தி திரைப்படங்களின் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இருவரும் திருமணத்திற்கு முன்பாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார்கள். இத்தாலி நாட்டில் சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் இயற்கை எழில் கொஞ்சம் அழகிய இடத்தில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இருவரும் சைக்கிளிங் செய்த வீடியோ ஒன்றையும் நடிகை அதிதிராவ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram