பிரபல நடிகரான சேதுராமன் கடந்த 2013-ஆம் ஆண்டு ரிலீசான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 உள்ளிட்ட திரைப்படங்களில் சேதுராமன் நடித்துள்ளார். பிரபல காமெடி நடிகரான சந்தானத்தை நெருங்கிய நண்பர் தான் சேதுராமன். சேதுராமன் நடிகராக மட்டுமில்லாமல் மருத்துவரும் ஆவார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் டெர்மடாலஜி துறையில் மருத்துவ படிப்பை முடித்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு சொந்தமாக தோல் நோய் மருத்துவமனையை திறந்தார். இதனை தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அண்ணா நகரில் இரண்டாவது மருத்துவமனை திறந்தார்.
இதற்கிடையே கடந்த 2016-ஆம் ஆண்டு உமா என்பவரை சேதுராமன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் சேதுராமன் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். சேதுராமன் உயிரிழந்த போது அவரது மனைவி இரண்டாவதாக கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
கணவரின் மறைவிற்குப் பிறகு உமா தனது மகள் சஹானாவையும் மகன் வேதாந்தையும் தனியாளாக வளர்த்து வந்தார். இந்நிலையில் சேதுராமன் மனைவி உமா தங்களின் ஒன்பதாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களை வீடியோவாக பகிர்ந்து ஒரு உருக்கமான பதிவையும் போட்டுள்ளார். அதில், இது எல்லாம் அக்டோபர் 11 ஆம் தேதி நாங்கள் முதன்முதலில் 2015 இல் சந்தித்தபோது தொடங்கியது.
இந்த உறவில் நீங்கள் முடிச்சுப் போட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகின்றன. எல்லா திருமணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. ஆனால் எங்களுடையது அப்படித்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டு அன்பான குடும்பங்களுடன் இரண்டு முற்றிலும் மாறுபட்ட ஆளுமைகள் ஒன்று சேர்கின்றன. வாழ்க்கையில எனக்கு எந்த வருத்தமும் இல்ல… உங்க வாழ்க்கைப் பயணத்துல ஒரு அங்க இருந்ததில் எனக்கு சந்தோஷம் என பதிவிட்டுள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க