
CINEMA
பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் சதீஷ்… யார் யாருடன் தெரியுமா?… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்தவர் நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ் சமீபத்தில் நடந்து முடிந்த சிஎஸ்கே பைனல் மேட்ச் காண ஸ்டேடியத்திற்கு சென்றிருந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் அவர் அங்கிருந்தவாறு சிஎஸ்கே ஜெயித்ததை கொண்டாடிய வீடியோவையும் இணையத்தில் பதிவு செய்ய அதுவும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.
தற்பொழுது கிரிக்கெட்டில் அதிகம் ஈடுபாடு காட்டி வரும் நடிகர் சதீஷ், பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான விஜய் மற்றும் டேவிட் மிலர்சாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.