நடிகர் சதீஷின் மகளா இது..? இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

By Mahalakshmi on ஜூன் 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் சதீஷ்-ன் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி உள்ளிட்ட நடிகர்கள் வரிசையில் இணைந்தவர் தான் சதீஷ். காமெடி நடிகரான இவர் எட்டு வருடங்களாக கிரேசி மோகன் இடம் உதவியாளராக பணியாற்றினார்.

   

முதன்முதலில் ஏஎல் விஜய் இயக்கிய பொய் சொல்லப் போகிறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய இவர் அதன்பிறகு மதராசபட்டினம், எதிர்நீச்சல், மான் கராத்தே உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தார். பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரேசி மோகன்-இன் குழுவில் பணியாற்றிய இவர் 2003 ஆம் ஆண்டு விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்தார்.

   

காமெடி தொடரான இது 25 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது. தற்போது நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கிய நிலையில் அதற்கு அடுத்த வரிசையில் சூரி இருந்தார். அவரும் தற்போது ஹீரோவாக நடித்த அசத்தி வருகின்றார். இதனால் யோகி பாபு மற்றும் சதீஷ் மட்டுமே சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்கள். சதீஷும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த வருகின்றார் .

 

சதீஷ் கடந்து 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தனது மகளின் முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சதீஷ் பல பிரபலங்களை அழைத்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் என்று பல பிரபலங்கள் மகளின் பிறந்த நாளுக்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

நடிகர் சதீஷ் கடைசியாக நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து படங்களில் ஹீரோவாகவும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வரும் சதீஷ் தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் என்ன இவ்வளவு பெருசா வளந்துட்டாங்க? என்று கூறி வருகிறார்கள்.