ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போன ‘பாக்கியலட்சுமி’ கோபி… அடேயப்பா.. செம ஸ்டைலா இருக்காரே… 

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போன ‘பாக்கியலட்சுமி’ கோபி… அடேயப்பா.. செம ஸ்டைலா இருக்காரே… 

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. பாக்யா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் மிகச் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளனர்.

தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியாவை அவரது கணவர் கோபி விட்டு சென்றாலும் அதைப்பற்றி அவர் கவலைப்படாமல் சொந்த காலில் நின்று தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வருகிறார். அவரின் இந்த மாற்றத்தை கண்டு பெண்கள் அனைவரும் இதுபோல தைரியமாக எதையும் சாதிக்க வேண்டும் என்று எண்ணி வருகின்றனர்.

இந்த சீரியலில் பாக்கியா தற்பொழுது கேட்டரிங் ஆர்டர் எடுத்து, அதற்காக வேண்டி ஆங்கிலமும் கற்றுக் கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து இந்த சீரியலில் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்பொழுது இந்த தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார்.

இவரின் நடிப்புக்கென்ற இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் நடிகர் சதீஷின் பலரும் பார்த்திடாத ஒரு அரிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இந்த புகைப்படத்தில் அவர் தாடி மீசை எல்லாம் வைத்து செம ஸ்டைலாக  காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பாக்கியலட்சுமி சீரியல் கோபியா இது?’ என்ற ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம்…

Begam