”என்னால் 150 வயது வரை வாழ முடியும்… ரகசியத்தை சொல்லனும்னா நீங்க இதை செய்யணும்”…  வைரலாகும் நடிகர் சரத்குமாரின் பேட்டி…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் வெளிவந்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் தளபதி விஜயின் தந்தையாக நடித்து அசத்தினார்.

   

மேலும் ,பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டாரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சரத்குமார். இவர் சினிமாவில் மட்டுமின்றி சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் சரத்குமார் பேசும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகிவிடும். அந்த வகையில் தற்போது இவர் ‘என்னால் 150 வருடம் வாழ முடியும். நான் இப்பொழுதே 70 வயதை நெருங்கி விட்டேன். ஆனால் 25 வயது இளைஞனை போலவே இருக்கிறேன்.

என்னால் 150 வயது வரை வாழ முடியும்’ என்று கூறியுள்ள பேட்டியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் ‘என்னை 2026 முதலமைச்சர் ஆக்குங்கள். அப்பொழுது அதற்கான ரகசியத்தை சொல்கிறேன்’ என்றும் கூறியுள்ளார். தற்பொழுது நடிகர் சரத்குமாரின் இந்த போட்டியானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.