சின்னத்திரை நிகழ்ச்சியான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகர் சந்தானம். தற்போது இவர் வளரும் ஹீரோவாக இருக்கிறார்.
அதுவும் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியில் ஒன்றுதான் லொள்ளு சபா. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்று கூறலாம். அடுத்த வாரம் ரிலீஸ் ஆகக்கூடிய படங்கள் அனைத்தையும் காமெடியாக சித்தரித்து தொகுத்து வழங்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
அதிலிருந்து வந்த சந்தானம், சாமிநாதன், மனோகர், ஷேஷு உள்ளிட்ட பலர் இப்போது தமிழ் சினிமாவின் அடையாளம் பெற்ற நடிகர்களாக உள்ளனர். ஆனாலும் சந்தானம் அளவுக்கு யாராலும் உயர முடியவில்லை. அதற்குக் காரணம் சந்தானம், தன்னை சினிமாவுக்கு ஏற்றமாதிரி தகவமைத்துக் கொண்டதுதான்.
சந்தானம், காமெடியனாக தொடாத உச்சம் இல்லை. அதன் பிறகு ஹீரோ ஆகவும் சமாளித்து வண்டியை ஓட்டிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சந்தானம் தான் பெரிய உயரத்தை அடைந்ததை விட பெரிய விஷயம் தன்னுடன் தொடக்கத்தில் இருந்தவர்களை எல்லாம் தான் பெரிய இடத்துக்குப் போனபோதும் மறக்காமல் இருந்ததுதான்.
தன்னுடன் லொள்ளு சபாவில் நடித்த நடிகர்களை எல்லாம் தன்னுடைய படங்களில் வரிசையாகப் பயன்படுத்தினார். லொள்ளு சபா வில் வசனம் எழுதியவ முருகானந்த் ஜோடியைதான் தன்னுடைய பெரும்பாலானப் படங்களுக்குக் காமெடி டிராக் எழுத வைத்துக் கொண்டார். அதே போல ராம்பாலா முதல் முருகானந்த் வரை பலரை இயக்குனர்களாக்கியுள்ளார். அதே போல தன்னுடைய நண்பர்கள் சிலரை அவர் தயாரிப்பாளர் ஆக்கியும் அழகுப் பார்த்துள்ளார். அதே போல லொள்ளு சபா நடிகர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு மருத்துவ செலவுகளையும் ஏற்று உதவியுள்ளார். இப்படி சந்தானம் செய்த உதவிகளை அவரது நண்பர்களே பொதுவெளியில் பேசியும் உள்ளனர்.