இத்தனை வருடங்களில் நடிகர் விஜயுடன் பெரும்பாலான திரைப்படங்களில் நடிக்காதது குறித்து நடிகர் சஞ்சீவ் சில விஷயங்களை பகிர்ந்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். பாக்ஸ் ஆபீஸ் கிங்-ஆக இருக்கும் இவர் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கின்றார்.
அதனைத் தொடர்ந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். நடிகர் விஜய் அடுத்த ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருக்கின்றார். ஏற்கனவே தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.
இதனால் தன்னை தயார்படுத்தி வருகின்றார் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பலருக்கும் தெரிந்த விஷயம் நடிகர் விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்றால் சஞ்சீவ், ஸ்ரீதர் உளிட்ட 6 பேர் தான். அவருடன் தான் அதிக அளவு நேரங்களை செலவிடுவார் என்று அதிக முறை பேட்டியில் அவரது தாயார் சோபாஷ் சந்திரசேகர் கூறியிருக்கின்றார். நடிகர் சஞ்சீவ் ஆரம்ப காலகட்டத்தில் விஜயுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் .
பின்னர் தமிழில் சீரியல்களில் பிரபல நடிகராக வலம் இவர் தற்போதும் சீரியலில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த திருமதி செல்வம் சீரியல் இன்றளவும் பலரின் ஃபேவரிட் சீரியலாக இருந்து வருகின்றது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் வானத்தைப்போல சீரியலில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.
இப்படி சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் இவர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் போட்டியாளர் விஜயின் நெருங்கிய நண்பர்களாக இருந்தும் ஏன் பெரிய கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து இருந்த சஞ்சீவ் நாங்கள் ஆறு நண்பர்களுக்கும் ஒரு பாலிசி இருக்கின்றது.
இத்தனை ஆண்டுகளாக அதை நாங்கள் கடைபிடித்து வருகின்றோம். பணி ரீதியாக யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவரவர் வேலையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மட்டுமே பகிர்ந்து கொள்வோம். ப்ரொபஷனலா யாரும் யார்கிட்டயும் வந்து நிக்க கூடாது. அதை தவிர்த்து உன் படத்தில் எனக்கு வாய்ப்பு தான் என்று நானும் கேட்க மாட்டேன், யாராவது ஒரு இயக்குனர் விஜய்க்கு கதை வைத்திருக்கிறேன் சிபாரிசு செய்யுங்கள் என்று சொன்னாலும் அதையும் செய்ய மாட்டேன்” என்று சஞ்சீவ் கூறியிருந்தார்